[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது!

doctor-rapes-patient-circulates-video-clip-held

சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வெளியிட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், மூல வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அருகில் கிளினிக் நடத்தி வந்த வன்ஸ்ராஜ் திவிவேதி (58) என்ற டாக்டரை சந்தித்தார். அவர் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு, வலி அதிகமாக இருப்பதாகக் கூறி கிளினிக்கிற்கு சென்றுள்ளார், இளம்பெண். அப்போது அவருக்கு ஊசி போட்ட திவிவேதி, அங்கேயே சிறிது நேரம் தூங்குமாறு கூறியுள்ளார். அதன்படி தூங்கியவர் 45 நிமிடத்துக்குப் பிறகு எழுந்து, வீட்டுக்குச் சென்றார். சென்றதும் அவரது மொபைல் போனுக்கு ஒரு வீடியோ வந்தது. மருத்துவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ அது. 

அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், மருத்துவரைச் சந்தித்து கோபமாகக் கத்தினார். இதுபற்றி யாரிடமும் சொன்னால், இந்த வீடியோவை பரப்பி விடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை காட்டி மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு மலாடு பகுதிக்கு கணவருடன் சென்றுவிட்டார் அந்தப் பெண். பிறகும் தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்தார். அவர் மறுத்தார். இதனால், வீடியோவை அந்தப் பெண்ணின் கணவருக்கு அனுப்பினார் மருத்துவர்.

அதிர்ச்சி அடைந்த அவர் கணவர், இதுபற்றி மனைவியிடம் விசாரித்தார். அப்போதுதான் நடந்த கதைகளை கண்ணீரோடு தெரிவித்தார், இளம் பெண். இதையடுத்து மேக்வாடி காவல் நிலையத்தில் இருவரும் புகார் கொடுத்தனர். ஆதாரமாக அந்த வீடியோ காட்சியையும் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவர் திவிவேதியை கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close