[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு!

7-killed-as-bus-runs-over-vaishno-devi-pilgrims-sleeping-on-pavement-in-up

தூங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மோகன்புரா மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு கடந்த 3 ஆம் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். அங்கும் அதைச் சுற்றியுள்ள கோயில்களிலும் வழிபட்டு விட்டு நேற்று சொந்த ஊருக்குத் திரும்பினர். 

வரும் வழியில் புலந்த்ஷர் பகுதியில், நரோரா பகுதியில் ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் வந்த வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைக்கப் பட்டுள்ள நடைபாதையில் தூங்கினர். 

இன்று அதிகாலை 4 மணியளவில் வேகமாக வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 4 பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close