[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

ஹைதராபாத் பெண் அமெரிக்காவில் மரணம்: தற்கொலையா?

hyderabad-woman-found-dead-in-her-us-home-parents-allege-torture-by-husband

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் அமெரிக்காவில் தன்னுடைய வீட்டில் உயிரிழந்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கஜம் வனிதா(38). இவர் தன்னுடைய கணவர் ரசகொண்டா சிவக்குமார்(40) உடன் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சிவக்குமார் சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தன்னுடைய வீட்டில் அவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தார். வனிதா உயிரிழந்தது குறித்த தகவல் உறவினர்கள் மூலமாக அவரது பெற்றோர்களுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, தன்னுடைய மகளின் மரணம் குறித்து காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அவரது தந்தை அளித்தார். அந்தப் புகாரில், “தன்னுடைய மகள் கடந்த ஜூன் மாதம் தான் அமெரிக்காவிற்கு கணவருடன் சென்றார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அமெரிக்கா சென்றது முதல் அவர் எங்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. 

              

தன்னுடைய மகள் அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். வனிதாவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் இங்கு வந்தபிறகு தான் எங்களால் எதனையும் உறுதியாக சொல்ல முடியும்” என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, வனிதாவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் சிவக்குமாரிடம் காவலில் வைத்து அமெரிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close