[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை

no-more-trees-to-be-axed-in-green-lung-as-sc-orders-status-quo-next-hearing-on-oct-21

மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகம் வாகன நிறுத்தம் அமைப்பதற்காக மும்பையின் ஆரே பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்ட முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மரங்களை வெட்டுவதற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. 

இதனால் மரங்களை வெட்டுவதற்காக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் முயன்றபோது, ஆரே பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி டெல்லியை சேர்ந்த சட்ட மாணவர்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதத்தை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை ஏற்று நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. 

உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு அமர்வு முன், இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அதில் மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர்களை விடுவிக்கவும், இதுவரை எத்தனை மரங்களை வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கை வரும் 21ம் தேதித்துக்கு சிறப்பு அமர்வு ஒத்திவைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close