[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்

ramzan-festival-celebrations

ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் உற்சாகம் பொங்க கொண்டாடப்படுகிறது. பள்ளிவாசல்களில் அதிகாலையில் இருந்தே தொழுகைகள் நடைபெறுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

சென்னையில் திருவல்லிக்கேணி பெரிய மசூதி, ஆயிரம் விளக்கு மசூதி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்தினர். ரம்ஜானை முன்னிட்டு பள்ளிவாசல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதேபோல், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும், ரம்ஜான் பண்டிகை, வழக்கமான உற்சாகத்துடன் முன்னெடுக்கப்படுகிறது.

ரம்ஜான் கொண்டாட்டத்தை ஒட்டி, ஹைதராபாத் நகரம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லி ஜூம்மா மசூதியில், நேற்று இரவிலிருந்தே, ஏராளமான இஸ்லாமியர்கள், சிறப்பு தொழுகைக்காக திரண்டுள்ளனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் வர்த்தக தலைநகரமான மும்பையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதுடன், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close