கர்நாடகாவில் 7-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் கர்நாடகாவில் 7-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான சுரேஷ் குமார், நடப்புக் கல்வியாண்டில் இருந்து 7-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்படும் என்றார். இதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், “ மாணவர்கள் சொல்லிக் கொடுப்பதை கற்றுக்கொண்டு தேர்ச்சி அடைகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம். 9-ஆம் வகுப்பு வரை தோல்வி இல்லை என்கின்றபோது கல்வியின் தரம் ஒருவேளை பாதிக்கப்படலாம்.” எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நியூஸ் மினிட் இணையதளத்திற்கு பேசிய கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “ 7-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கேள்வித்தாள்களை தயாரிக்கும் பொறுப்பை எஸ்எஸ்எல்சி மேற்கொள்ளும். மாவட்ட அளவில் விடைத்தாள்கள் திருத்தப்படும். ஒருவேளை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அடுத்த ஆண்டு நிச்சயம் அமல்படுத்தப்படும்” என்றார்.
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
என்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு
5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு