[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு

அக்டோபர் மாதத்திலும் வேலையில்லா நாட்களை அறிவித்தது அசோக் லேலண்ட்

ashok-leyland-announces-non-working-days

அசோக் லேலண்ட் நிறுவனம் அக்டோபர் மாதத்திலும் தனது பணியாளர்களுக்கு மீண்டும் வேலை இல்லா நாட்களை அறிவித்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன விற்பனை சரிவு கண்டுள்ளது. இதன் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் ஏற்கெனவே தனது பணியாளர்களுக்கு வேலை இல்லா நாட்களை அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதமும் இரண்டு முதல் 15 நாட்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வேலை இல்லா நாட்களை அறிவித்துள்ளது. நாட்டின் பல இடங்களிலும் அதன் ஆலைகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அசோக் லேலண்ட் நிறுவனம் தேசிய பங்குச் சந்தை நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், விற்பனைக்கேற்ற வகையில் உற்பத்தியை சீரமைக்கும் பொருட்டு நாட்டின் பல இடங்களிலும் உள்ள ஆலைகளுக்கு இரண்டு முதல் 15 நாட்கள் வேலை இல்லா நாட்களை அக்டோபர் மாதத்தில் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.வேலை இல்லா நாட்கள் அறிவிப்பால் அசோக் லேலண்ட் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close