[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

வெள்ளத்தில் இடுப்பளவு மழை நீரில் தந்தையை கைகளில் தூக்கிச் சுமந்த நீதிபதி

judge-carries-father-out-of-flooded-home

இடுப்பு அளவு தேங்கியிருந்த மழை நீரில், நீதிபதி ஒருவர் தனது தந்தையை கைகளில் தூக்கிச் சென்ற சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது.

பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 27-ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படித்தான், பாட்னாவின் ராஜேந்திரா நகரிலும், வடிகால்கள் சரியில்லாமல் இருந்த காரணத்தினால் மழை நீர் இடுப்ப அளவு தேங்கியுள்ளது. ராஜேந்திரா நகரில்  அம்மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான சுதீர் சிங்கின் வீடும் உள்ளது. இவரது வீட்டை சுற்றியும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இடுப்பளவு மழை நீரில் தனது தந்தையை பத்திரமாக நீதிபதி சுதீர் சிங் தனது கைகளில் தூக்கிச் சென்றுள்ளார். இவரது தந்தை ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார்.

நீதிபதி சுதீர் சிங் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே வடிகால்களை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர். வடிகால்கள் முறையான கால அளவில் பராமரிக்கப் பட வேண்டும் எனவும் அப்போதுதான் நகரம் சுத்தகமாக இருக்கும் எனவும் உத்தரவிட்டார். இதற்கு முறையான நிதியை ஒதுக்க மாநில அரசுக்கும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் வடிகால்கள் சரியில்லாத பிரச்னையால் தற்போது அவரின் வீடே மழை நீரால் சூழ்ந்துள்ளது.

முன்னதாக பாட்னா நீதிபதிமன்றத்தின் நிதிபதியான மதுரேஷ் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர், ராஜேந்திர நகர் பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close