[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

‘இந்தியாவிலிருந்து 3,197 லட்சம் கோடியை பிரிட்டீஷ் கொள்ளையடித்தது’ - ஜெய்சங்கர்

british-looted-45-trillion-from-india-in-today-s-value-jaishankar

இந்தியாவில் இருந்து 3,197 லட்சம் கோடி ரூபாயை பிரிட்டீஷ் கொள்ளையடித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், “18ஆம் நூற்றாண்டின் மத்தியில் வந்த மேற்கத்திய நாடுகளின் கொள்ளையடிக்கும் வடிவத்தால் இந்தியா இரண்டு நூற்றாண்டுகளாக அவமதிக்கப்பட்டது. ஒரு பொருளாதார ஆய்வு, இந்தியாவில் பிரிட்டீஷ் கொள்ளையடித்த செல்வத்தின் மதிப்பு தற்போதைய மதிப்பீட்டின்படி 3,197.565 லட்சம் கோடி ரூபாய் (45 ட்ரில்லியன் டாலர்) என கணித்துள்ளது” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஈரான் மற்றும் ரஷ்யா உடனான நெருக்கத்தால் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜெய்சங்கர் பேசினார். அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close