[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

நடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்!

indigo-plane-with-goa-minister-on-board-returns-to-airport-after-engine-catches-fire

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீவிபத்தில், விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் கோவா அமைச்சர் உட்பட 180 பேர் உயிர்தப்பினர்.

கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் நேற்று இரவு வழக்கம் போல டெல்லிக்குப் புறப்பட்டது. விமானத்தில் கோவா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் அவரது அலுவலக அதிகாரிகள் உட்பட 180 பேர் இருந்தனர். விமானம் கோவாவில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தில் ஒரு என்ஜினில் தீ பிடித்து எரிவதைப் பயணிகள் பார்த்து அலறினர்.

அதைக் கண்ட விமானி, தீ பிடித்த என்ஜினை அணைத்துவிட்டு மற்ற என்ஜின் மூலமாக விமானத்தை இயக்கி, கோவா விமான நிலையத்துக்குத் திருப்பினார். விமானம் அங்கு பத்திரமாகத் தரையிறங்கியதுதாம்தான் பயணி களுக்கு உயிரே வந்தது.

இதுபற்றி கோவா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் கூறும்போது, ’விமானத்தில் இடது பக்க என்ஜினில் தீப்பிடித்தது. இதைக் கண்டதும் பயணிகள் அலறினர். ஆனால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு, ஒரு என்ஜினைக் கொண்டு விமானத்தை இயக்கி சிறப்பாக செயல்பட்டார். நாங்கள் வேறு விமானம் மூலம் டெல்லி சென்றோம்’’ என்றார்.
இந்த சம்பவம் பற்றி இண்டிகோ விமான நிறுவனம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close