[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பேருந்தை எதிர்த்து நின்றது ஏன்? - வைரலான கேரள பெண் பேட்டி 

fear-made-woman-on-scooter-stand-still-before-bus

கேரள மாநில இருவழி பாதையொன்றில் அரசுப் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்தப் பேருந்து இருவழிப் பாதைக்காக சாலையில் போடப்பட்டிருந்த விதிமுறை கோட்டை மீறி தவறான பாதையில் வந்தள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தச் சாலை வழியே முறையான தடத்தில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பாதை மாறி வந்த பேருந்திற்கு வழிவிடாமல் இந்தப் பெண் அப்படியே உறைந்துபோய் நின்றிருந்தார். 

இதனையடுத்து பேருந்தின் ஓட்டுநர் தன் தவறை உணர்ந்து சரியான பாதைக்கு மீண்டும் பேருந்தை திருப்பிச் சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சில தினம் முன்பு சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த வீடியோவில் தைரியமாக நடந்து கொண்ட  பெண்ணிற்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் யார் என்பது தெரியவந்துள்ளது. அவர் பெயர் சூர்யா மானீஷ். இவர் ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஒரு  பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,“சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில் கடைசியாக என்ன நடந்து என்ற காட்சி மட்டுமே இடம்பெற்றிருந்தது. நான் பேருந்து ஓட்டுநருக்கு எதிராக சவால்விட்டபடி ஒன்றும் சாலையில் நிற்கவில்லை. எனக்கு அந்த நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆகவே அப்படியே நின்றேன். 

இந்தச் சம்பவத்திற்கு முன்பாக என் முன்னால் ஒரு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து திடீரென இடது புறம் சென்று நின்றது. இதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளி பேருந்து திரும்பிய பிறகு நான் சென்று கொண்டிருந்த சாலைப் பகுதியில் எதிரே அரசுப் பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திக் கொண்டு வந்தது. 

இந்தப் பேருந்து வந்த வேகத்தைப் பார்த்தவுடன் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆகவே நான் பயந்து எதுவும் செய்யாமல் நின்றேன். பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நான் தப்பித்தேன். அவர் சரியான நேரத்தில் பேருந்தின் வேகத்தை குறைத்து வலது புறமாக திருப்பி சென்றார். அதன்பின்னர் தான் எனக்கு பயம் குறைந்தது. இந்தச் சாலையில் கடந்த 7 வருடமாக நான் பயணிக்கிறேன். ஆனால் இது போன்று நடப்பது இதுவே முதன்முறை” எனத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர், “நான் இயக்கிய பேருந்து பெரும்பாவூர் பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு முன்பு இந்தச் சம்பவம் நடைபெற்றது. நான் சென்று கொண்டிருந்த பாதையில் பள்ளிப் பேருந்து ஒன்று குழந்தைகளை இறக்கி கொண்டிருந்ததால் நான் காலியாக இருந்த வலது புறத்தில் பேருந்தை இயக்கினேன்.

அப்போது தான் இந்தப் பகுதியில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்றதை பார்த்தேன். அவர் தொடர்ந்து வாகனத்தை நகர்த்தாமல் என்னைப் பார்த்து கொண்டிருந்தார். நான் உடனே மீண்டும் சாலையின் இடது பக்கத்திற்கு சென்று பேருந்து நிலையத்திற்குள் சென்றேன். இந்தச் சம்பவத்தை அப்பெண்ணின் நண்பர்கள் சிலர் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவையே அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close