[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

“ படிச்சத எழுதுங்க கதை எழுதாதீங்க”- பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அட்வைஸ்

university-advice-to-students

நாளை தேர்வு என்றால் முழுக்க முழுக்க படித்துவிட்டு, படித்தது மறந்துவிடக் கூடாதே என்ற எண்ணத்திலேயே ஒரு க்ரூப் தேர்வறைக்குள் செல்லும். ஆனால் சில மாணவர்களோ உள்ளே சென்றுதான் என்ன கதை எழுதலாம் என யோசிப்பார்கள். பாட்டி வடை சுட்ட கதை முதல் தங்களுக்கு தெரிந்த அத்தனை கதைகளையும் விடைகளாக எண்ணி விடைத்தாளில் கக்கி வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். போதாகுறைக்கு தேர்வறையில் வேடிக்கை பார்ப்பது, சில நேரங்களில் நல்லவன் போல அப்பாவியாக முகத்தை வைப்பது என தேர்வறையையே தங்களது வீட்டின் அறையை போல மாற்றிவிடுவார்கள்.

மாணவர்கள் வண்டி வண்டியாய் கதை எழுதுவதை முன்கூட்டியே அறிந்து உஷாரான பல்கலைக்கழகம் அதற்கேற்ப கேள்வித்தாளில் மாணவர்களுக்கு ஒரு பெரிய அட்வைஸை கொடுத்திருக்கிறது. பல்கலைக்கழகம் வினாத்தாளில் கொடுத்த அட்வைஸை நீங்கள் வாசித்தீர்கள் என்றால், மாணவர்கள் விடைத்தாளை திருத்தும் பேராசிரியர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டீருப்பார்களோ என்று உங்களுக்கே எண்ணத் தோன்றும். அப்படி என்னதான் வினாத்தாளில் அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்..?

1. உங்களுக்கு பொறியாளராக பாடத்துடன் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. கதை எழுதுவதற்கு அல்ல. அதனால் விடையை நறுக்கென்று எழுதவும்.

2. ஒருவேளை நீங்கள் என் வகுப்புகளில் பங்கேற்கவில்லை என்றாலோ, அல்லது தேர்வுக்கு தயாராகவில்லை என்றாலோ உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள். அதற்கு பதிலாக கடவுளை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

3. உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் நபரை பார்த்து தேவையில்லாமல் சிரிக்க வேண்டியதில்லை. அவர்களுக்கும் விடை தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நெட்வொர்க் போல செயல்பட தேர்வறை ஒன்றும் சரியான இடம் கிடையாது.

4. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உதாரணங்கள்/ படங்கள் இல்லாத உங்களது விடைகள், ஸ்மார்ட்போன் இருந்தும் அதில் இணையவசதி இல்லாததை போன்றது.

5. இது அல்லது அது என்று உங்களது வாழ்க்கையில் ஏகப்பட்ட ஆப்ஷன் வைத்திருப்பது நல்லது. ஆனால் இங்கு அப்படியில்லை. எல்லா கேள்விகளுக்குமே நீங்கள் விடையளிக்க வேண்டும்.

6. உங்களுக்கு அதிகம் தெரியும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close