டெல்லியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கிழக்கு டெல்லியின் ஷாதாரா பகுதியில் நேற்று ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் அப்பகுதியிலுள்ள புதிய உஸ்மான்பூரில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். அப்போது அவர்களை நோக்கி வெள்ளை நிற உடை அணிந்திருந்த நபர் ஒருவர் இவர்களை துரத்துகிறார்.
அப்போது இருசக்கர வாகனத்திலிருந்த இருவர் கீழே விழுகின்றனர். இதனைத் தொடர்ந்து வெள்ளை நிற உடை அணிந்திருந்த நபர் அவர்களில் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார். அதன்பின்னர் அவர் துப்பாக்கியால் தாக்குகிறார். இதனையடுத்து அவர் தப்பி ஓடுகிறார். துப்பாக்கி குண்டு முதியவர் மீது படாததால் நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தின்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி, அச்சத்தில் அங்கிருந்து ஓடுவதும் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !