[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

இன்றைய முக்கியச் செய்திகள்!  

headlines-of-the-day

கேரளா - தமிழ்நாடு இடையிலான நதிநீர் பிரச்னைக்குத் தீர்வுகாண தலா 5 பேர் கொண்ட குழு. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி, பினராயி விஜயன் கூட்டாக அறிவிப்பு.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி இன்று விசாரணை. தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் எனத் தகவல்.

இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய முன்வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு. கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி நியூயார்க்கில் பேச்சு

நரேந்திர மோடியும் இம்ரான் கானும் சந்தித்துப் பேசினால் பல பிரச்னைகள் தீரும் என ட்ரம்ப் கருத்து. காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் நியூயார்க்கில் பேட்டி.

பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியதன் எதிரொலி. விருப்பப் பாடமாக தேர்வு செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு.

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை. பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close