தன்னுடைய பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தமிழில் அனுப்பிய வாழ்த்து செய்தியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ப.சிதம்பரத்தின் பிறந்தநாளான செப்டம்பர் 16ஆம் தேதி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதில், “உங்கள் பிறந்தநாள் அன்று என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என தமிழில் வாழ்த்தியிருந்தார் மோடி.
இந்த கடிதத்தைதன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ப.சிதம்பரம், “என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், “பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே?. தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்.” என்றும் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திகார் சிறையில் ப.சிதம்பரம் உள்ள நிலையில், அவரது சார்பில் குடும்பத்தினர் ட்விட்டர் பதிவுகளை கையாண்டு வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா
இது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி?