[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது”- ராஜ்நாத் சிங்

rajnath-singh-warns-terrorists

இந்தியாவுக்குள் நுழையும் எந்தவொரு பயங்கரவாதியும் இனி உயிருடன் பாகிஸ்‌தான் திரும்ப முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

பீகார் மாநி‌லம் பாட்னாவில் பாரதிய ஜனதா சா‌ர்பில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்த ‌விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், புற்றுநோயை போல காஷ்மீரில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது சிறப்பு அந்தஸ்து எனக் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் அளவுக்கு, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி விடுவதாகவும், இனி இந்தியாவுக்குள் நுழையும் எந்த பயங்கரவாதியும் உயிருடன் பாகிஸ்தான் திரும்ப முடியாது என்றும் எச்சரித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல்களை பாகிஸ்தான் கட்டுப்படுத்தாவிட்டால், ‌பாகிஸ்தான் பல பகுதிகளாக துண்டாடப்படும் விபரீதத்தை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close