[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

திருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்

a-women-suicide-in-tirupati-police-inquiry

திருப்பதியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநி‌லம் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சுபதம் நுழைவு வாயில் பின்புறத்திலிருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் துர்நாற்றம் வீசிய பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பாதுகாப்பு வளையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுபதம் நுழைவு வாயில் பின்புறம் பெண் எவ்வாறு செல்ல முடிந்தது என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்தச் சம்பவம் தேவஸ்தானத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை காட்டுகிறது என பக்தர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருமலை ஒன் டவுன் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ருயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஒன் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close