[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

சிதையில் தள்ளி இளைஞரை கொன்றதாக புகார் -போலீசார் விசாரணை 

suspected-of-black-magic-man-thrown-into-pyre-of-woman-near-hyderabad

சூனியம் வைத்து பெண்ணை கொன்றுவிட்டதாக சந்தேகித்து இளைஞர் ஒருவரை சிதையில் பிடித்து தள்ளிய சம்பவம் நடந்தேறியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஷமீர்பேட் பகுதியின் அதரசப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கயாரா லக்ஷ்மி (45). இவர் உடல்நலக் குறைவால் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கடந்த செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் போயினி ஆஞ்சநேயலு (25) இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்துள்ளார். 

அந்தச் சமயத்தில் லக்ஷ்மியின் மரணத்திற்கு ஆஞ்சநேயலு வைத்த செய்வினைதான் காரணம் எனக் கூறி அங்கு இருந்தவர்கள் அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவரை லக்ஷ்மியின் சிதைக்கு வைக்கப்பட்டிருந்த தீயில் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஆஞ்சநேயலு நெருப்பில் கருகி உயிரிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.  இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close