[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

அமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு 

mamata-meet-amit-shah-in-delhi

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். 

இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு பிரதமரை முதல்முறையாக நேற்று நேரில் சந்தித்துப் பேசினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அப்போது மேற்கு வங்கத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்ற மோடியிடம் கோரிக்கை வைத்தார் மம்தா பானர்ஜி. 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா, “மேற்கு வங்கத்தின் பெயரை `பங்களா’ என்று மாற்ற வேண்டும் என மாநிலச் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் கோரிக்கையை இன்னும் மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே, இது மேற்கு வங்க மக்கள் உணர்வுகள் சார்ந்த விஷயம். அதனால் எங்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கான பல ஆவணங்களையும் அவரிடம் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று அதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மம்தா பானர்ஜி நேரில் சந்தித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close