கர்நாடகாவில் பட்டியலின எம்பி ஒருவர் கிராமத்திற்குள் நுழைய அப்பகுதி மக்கள் அனுமதிக்கவில்லை.
கர்நாடகா மாநிலத்தின் சித்தர துர்கா பகுதியை சேர்ந்த எம்பி ஏ.நாராயணசாமி. இவர் இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பாவாகடா கிராமத்திற்கு மருத்துவர்கள் மற்றும் மருந்தக நிறுவன அதிகாரிகளுடன் நேற்று சென்றார்.
அப்போது இந்தப் பகுதியில் வசிக்கும் கோல்லா சமூதாய மக்கள் ஏ.நாராயணசாமி எம்பி கிராமத்திற்கு வருவதை தடுத்துள்ளனர். ஏனென்றால் இவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இவரை தங்களது கிராமத்திற்குள் அனுமதிக்க அம்மக்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் இந்தக் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் கூட உள்ளே நுழைந்தது இல்லை. ஆகவே உங்களை அனுமதிக்க முடியாது என்று மக்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்பி நாராயணசாமி இந்த இடத்திலிருந்து கிளம்பினார். இந்த விவகாரம் தொடர்பாக அம்மாவட்ட எஸ்பி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து எஸ்பி, “எம்பியை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தவர்கள் யார் என்று விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை நான் கேட்டு இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயன், “கிராமத்திற்குள் நுழைவதற்கு எம்பிக்கே அனுமதி இல்லை என்றால் அது மிகவும் கண்டனத்திற்கு உரிய செயலாகும். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். நாம் அனைவரும் சமம். நமக்கு நடுவில் எந்தவித பாகுபாடும் இல்லை” எனக் கூறினார்.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்