[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல” - ராகுல்காந்தி

india-s-many-languages-are-not-her-weakness-says-rahul-gandhi

பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் ராகுல்காந்தி மொழி சர்ச்சை குறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தமிழ், இந்தி, கன்னடம், மராத்தி, ஆங்கிலம், உருது என 23 மொழிகளை தேசியக்கொடி எமோஜியுடன் குறிப்பிட்ட ராகுல், பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல  என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close