[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

எதிர்பார்த்த அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இல்லை ஐஎம்எஃப் கவலை

india-s-gdp-growth-rate-much-weaker-than-expected-imf

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நாங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் பலவீனமாக இருப்பதாக சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கவலை தெரிவித்துள்ளது.

Image result for IMF

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஐஎம்எப் செய்தித் தொடர்பாளர் கெரி ரைஸ் "கார்ப்பரேட் நிறுவனங்கள், சுற்றுசூழல் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதில் நிச்சயமற்ற சூழலும், வங்கி அல்லாத நிறுவனங்கள் பலவீனமான நிலையில் இருப்பதுவுமே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாவதற்கான காரணம்.  இந்தியாவின் வளர்ச்சி குறித்து புதிய கணிப்புகளை வைத்திருக்கிறோம் அதை வெளியிட இருக்கிறோம். ஆனால், இந்தியாவின் அண்மை காலத்திலான பொருளாதார வளர்ச்சி நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பலவீனமாக இருக்கிறது " என்றார் அவர்.

Image result for India GDP

மேலும் தொடர்ந்த கெரி ரைஸ் " ஆனாலும் உலக அளவில் இந்தியா இன்னும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது.
தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஐஎம்எஃப் கண்காணிக்கும்.உலகப் பொருளாதார கண்ணோட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து எங்கள் கருத்தை பதிவு செய்வோம். நடப்பு நிதியாண்டுக்கான (2019-20) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7.03 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் ஐஎம்எஃப்  குறைத்துள்ளது. 2021-ம் ஆண்டில்தான் இந்தியாவி்ன் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக வளர்வதற்கு வாய்ப்புள்ளது" என்றார் அவர். தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close