[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

“ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இந்தியச் சட்டத்தை மதிப்பதில்லை” - தமிழக அரசு முறையீடு 

facebook-not-complying-with-indian-law-resulting-in-lawlessness-tn-to-sc

இந்தியச் சட்டங்களை பேஸ்புக் போன்ற சமூகவலைத்தள நிறுவனங்கள் மதிப்பதில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. 
 
சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை ஆதார் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி பேஸ்புக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இது வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு விசாரணையில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் இந்தியச் சட்டத்தை மதிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்திய சட்டங்களை சமூக வலைத்தளங்கள் மதிக்காததால் குற்ற சம்பவங்களில் விசாரணைக்கு அவை சரியாக ஒத்துழைப்பது இல்லை. ஆகவே இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விரைவாக விசாரித்து ஆணை பிறப்பிக்க உத்தரவு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

ஏனென்றால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையில் ஓரளவு முடித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆகஸ்ட் 20ஆம் தேதி உத்தரவு தான் இந்த வழக்கின் விசாரணைக்கு சற்று முட்டுகட்டை போட்டுள்ளது. எனவே இதனை மாற்றி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முறையிட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close