[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

‘பிரதமருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ?’ - 2 பேர் மீது வழக்குப் பதிவு

2-charged-for-alleged-objectionable-remarks-on-social-media-against-pm

பிரதமர் மோடிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக இருவர் மீது உத்தரப் பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிஜேந்தர் சைனி மற்று பிரின்ஸ் அசோக் ஆச்சார்யா. இவர்கள் மீது சிவம் மேகாலி பிரிவைச் சேர்ந்த அசோக் ஆச்சார்யா என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் பிஜேந்தர் சைனி மற்றும் அசோக் ஆச்சார்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்தை பதிவிட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், பிஜேந்தர் சைனி மறும் அசோக் ஆச்சார்யா ஆகியோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல் அதிகாரி அனில் கபர்வான் தெரிவித்திருக்கிறார். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close