[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ஐபோன் கேமரா டிசைனில் அழகான உடை - மலாலா மகிழ்ச்சி 

malala-wins-the-internet-with-her-witty-tweet-on-new-iphone-11-pro-camera-design

ஐபோன் கேமரா வடிவத்துடன் தனது உடையின் டிசைனை ஒப்பிட்டு மலாலா ட்வீட் செய்துள்ளார்.

கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய மாடல் செல்போன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. ஐபோன்-11, ஐபோன்-11‌ ப்ரோ, ஐபோன்-11 ப்ரோ மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தட்டன. 

இந்த மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபோன்-11‌ ப்ரோ, ஐபோன்-11 ப்ரோ மேக்ஸ் மாடல்கள்  மூன்று கேமராக்களுடனும் வெளியாகியுள்ளது. பின்பக்க கேமராக்கள் மூலம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நின்றவாறே மூன்று கோணங்களில் புகைப்படம் எடுக்க முடியும்.


 
இந்நிலையில் மூன்று கேமராக்களின் வடிவத்தை இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். தேங்காயின் கண் என்றும், ஸ்பிட்ஜெட் ஸ்பின்னர் என்றும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக தனது ஆடையின் டிசைனை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள மலாலா, இது தற்செயலானதா? ஐபோன் மாடல்கள் வெளியான நாளில் நான் இந்த உடையை அணிந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அவர் அணிந்திருந்த அந்த உடையில் ஐபோன் கேமராக்கள் போல டிசைன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close