[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

இன்றைய முக்கியச் செய்திகள் சில..

headlines-of-the-day

மூன்று நாடுகள் அரசுமுறை பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. விமானநிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

தமது சுற்றுப்பயணம் முழுமையாக வெற்றி பெற்றிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு. நீர் சிக்கன திட்டங்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளப்போவதாகவும் பேட்டி.

விக்ரம் லேண்டரை துல்லியமாகக் கண்டறிய ஆர்பிட்டரை நிலவின் அருகே கொண்டு செல்ல இஸ்ரோ திட்டம். நிலவின் மேற்பகுதியில் இருக்கும் விக்ரம் லேண்டர் சேதமடையாமல் இருப்பதாக அதிகாரிகள் தகவல்.

ஒரே முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டது. உலக நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

பதவி விலகிய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை சந்தித்து அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை. தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தடையில்லை. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என சர்ச்சை எழுந்த நிலையில் ரயில்வே வாரியம் விளக்கம்.

தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம். ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை.

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவிப்பு.

பிரிட்டனின் முன்கூட்டியே தேர்தல் நடத்த எம்பிகள் எதிர்ப்பு. பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வைத்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close