[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

“இந்தியாவிற்குள் ஒருவரும் சட்டவிரோதமாக குடியேற முடியாது” - அமித்ஷா

measures-will-be-taken-to-ensure-illegal-immigrants-do-not-find-place-in-nrc-shah

இந்தியாவிற்குள் ஒருவர்கூட சட்டவிரோதமாக குடியேற அனுமதிக்க முடியாது என்றும் அதில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்ற அமித்ஷாவிடம் பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் தாஸ் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து அமித்ஷாவிடம் விரிவாக பேசியதாக கூறினார்.

இந்தியாவிற்குள் ஒருவரை கூட சட்டவிரோதமாக குடியேற்றக் கூடாது என்பதில் அமித்ஷா உறுதியுடன் இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தம்மிடம் அமித் ஷா தெரிவித்திருப்பதாக ரஞ்சித் தாஸ் கூறினார்.

முன்னதாக அண்டை நாடுகளில் இருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள இறுதிப்பட்டியலில் 19 லட்சத்து 6657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

எனவே இவர்கள் தங்களின் இந்தியர்கள் என்ற குடியுரிமையை இழக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் யாரும் தற்போது கைது செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் தங்களுக்கு உள்ள அனைத்து சட்ட வாய்ப்புகளை செய்து முடிக்கும் வரை எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்பட மாட்டாது என உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close