[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

புதிய மோட்டார் வாகன சட்ட விதி: லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்

odisha-truck-driver-fined-rs-86-500-the-highest-in-country-under-mv-act

புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. சாலை விதிகளை மீறுவோர் மீது தற்போது போலீசார் புதிய விதிகளின் படியே அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதாக 86 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர். இந்தத் தொகையே புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட அதிக தொகை எனவும் கூறப்படுகிறது. 

ஒடிசாவின் சாம்பல்பூர் பகுதியில் செப்டம்பர் 3ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். சாலை விதிகளுக்கு புறம்பாக பல்வேறு விதிகளை மீறியதாக லாரி ஓட்டுநரிடம் ரூ.86 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.  ஓட்டுநர் உரிமம் இல்லை, அதிக எடை ஏற்றுதல், பொதுவான விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல விதி மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

5 மணி நேரம் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய லாரி ஓட்டுநர் ரூ.70 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினார். ரூ.70ஆயிரத்துக்கு போலீசார் கொடுத்த ரசீது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close