[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

கேரள திருநங்கை கவிஞர் திருமணம்: காதலரை மணக்கிறார்

kerala-s-first-transwoman-poet-vijayarajamallika-to-tie-knot

கேரள திருநங்கை கவிஞர் விஜய ராஜமல்லிகா, தனது காதலரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் விஜய ராஜமல்லிகா. திருநங்கையான இவர் கவிஞர். திருச்சூர் நகர காவல் நிலையத்தில், தன்னார்வலராக பணியாற்றி வருகிறார். இவரது ’தெய்வத்தின்டே மக்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு கேரளாவில் பரவலாக கவனிக்கப்பட்டது. பின்னர் இத்தொகுப்பு, சென்னை பல்கலைக்கழகத்தில், முதுகலை மலையாள இலக்கியத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவரது மற்றொரு கவிதை தொகுப்பு, ’ஆண் நதி’. இவரது சுயசரிதை ’மல்லிகா வசந்தம்’ விரைவில் வெளியாக இருக்கிறது.

இவரும் திருச்சூர் அருகிலுள்ள மண்ணுதியை சேர்ந்த ஜாஸிமும் காதலித்து வந்தனர். இதற்கு ஜாஸிம் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், விஜய ராஜமல்லிகாவும் ஜாஷிமும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள் ளனர். இவர்கள் திருமணம் சனிக்கிழமை நடக்க இருக்கிறது. கேரளாவில், திருநங்கை கவிஞர் ஒருவர் திருமணம் செய்வது இதுதான் முதன்முறை

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close