[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

பிரதமர் மோடியின் பேச்சைக்கேட்டு கண்ணீர் விட்ட பெண் விஞ்ஞானிகள்!

modi-speech-in-bangalore-isro-center

சந்திரயான் 2க்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தாய்நாட்டிற்காக உழைப்பவர்கள் விஞ்ஞானிகள். சந்திரயான் 2க்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. கடைசிவரை நீங்கள் போராடியதற்கு பாராட்டுகள். விஞ்ஞானிகளின் மனோதைரியத்தை பாராட்டுகிறேன். நாட்டிற்காக இரவு பகல் பார்க்காமல் தூக்கமில்லாமல் விஞ்ஞானிகள் வாழ்ந்து வருகின்றனர். 

பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்தேன். தாய் நாட்டின் கனவுகளை நினைவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளீர்கள். நமது விண்வெளி திட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல்ல. நிச்சயமாக நிலவை தொடும் முயற்சி வெற்றியடையும். எதிர்காலத்தில் நாம் மேலும் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.” எனப் பேசினார். மோடியின் ஊக்க உரையைக் கேட்டு அங்கிருந்த பெண் விஞ்ஞானிகள் சிலர் உணர்ச்சிப்பெருக்கால் கண்ணீர் விட்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close