[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

காலை 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

modi-will-speech-to-people-today-at-8-am

சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் மோடி இன்று காலை 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

இதுகுறித்து இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விக்ரம் லேண்டரை சந்திரனில் தரையிறக்கும் இஸ்ரோவின் முயற்சியின்போது பிரதமர் மோடி அதில் பார்வையாளராக பங்கேற்றார். கடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விஞ்ஞானிகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று அவர்களுக்கு ஊக்கமளித்தார். இந்த சூழ்நிலையில், 8 மணிக்கு சந்திரயான்-2 திட்டம் குறித்து மோடி உரையாற்ற இருக்கிறார்.

Advertisement:
Related Tags : ModiSpeechPeople8 amமோடிஉரைகாலை 8 மணி
Advertisement:
Advertisement:
[X] Close