[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

திகார் சிறையில் ப.சிதம்பரம் கோரிய வசதிகள்..!

court-allows-separate-cell-for-p-chidambaram

திகார் சிறையில் அடைக்கப்ப‌டும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், இஸட் பாதுகாப்பில் உள்ள தனக்கு, சிறையிலும் அதே பாதுகாப்பு வழங்குமாறு சிதம்பரம் கோரிக்கை விடுத்தார். மேலும், அந்த பாதுகாப்பை வெளியே உள்ள காவலர்கள் மூலமே வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவருக்கு இஸட் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். 

இதுதவிர சிறையில் குளியல் இடத்துடன் கூடிய தனி அறையும், தனி கட்டில், சுகாதாரமான மெத்தை, தலையணை, போர்வை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், தான் எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும் அனுமதிக்க வேண்டும் எனவும் சிதம்பரம் கோரிக்கை விடுத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close