[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

சாலை விதிகளை மீறும் காவலர்களுக்கு இருமடங்கு அபராதம் - டெல்லி போலீசார்

delhi-traffic-cops-breaking-road-rules-to-pay-double-penalty

சாலை விதிகளை மீறும் காவலர்களுக்கு அபராதம் இருமடங்காக வசூல் செய்யப்படும் என டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்தியாவில் நாள்தோறும் பலர் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இதனால் வாகன சட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, புதிய வாகன சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவந்தது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு அபராத கட்டணத்தை பல மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. 

சமீபத்தில் அமலான புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி போலீசார் அபராதங்களை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி டிஜிபி அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் காவலர்கள் சாலை விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

சாலை விதிகளை மீறும் காவலர்களுக்கு  புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி உருவாக்கப்பட்ட அபராதத் தொகையை போல இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம் என புதிய விதி தெரிவிக்கிறது. ஆனால் காவலர்களாக இருந்தால் அது ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரிகளுக்கு வாகனம் ஓட்டும்போதும், அல்லது சொந்த வாகனங்களை ஓட்டும் போதும் சாலை விதிகளை கடைபிடிப்பது கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close