[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

உதவியாளர் கன்னத்தில் ‘அறை’ - சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா வீடியோ

congress-leader-and-karnataka-s-former-chief-minister-siddaramaiah-slaps-his-aide-outside-mysuru-airport

கர்நாடக காங். தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா அவரது உதவியாளருக்கு கன்னத்தில் ‘பொளேர்’ விட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி, கடந்த மாதம் கவிழ்ந்ததை அடுத்து புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். இந்நிலையில் கூட்டணி ஆட்சிக் கவிழ்ந்ததற்கு யார் காரணம் என்பது தொடர்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “சித்தராமையாவுக்கு நான் முதல்மைச்சரானதை சகித்துக்கொள்ள முடியவில்லை. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை, அரசுக்கு எதிராகச் செயல்படும்படி தூண்டியவர் அவர்தான்” எனத் தெரிவித்திருந்தார். 

 

அதற்குப் பதிலளித்த சித்தராமையா, குமாரசாமி, என்னை நண்பராகவோ, நம்பிக்கைக்குரியவராகவோ ஒரு போதும் பார்க்கவில்லை. அவர் என்னை எதிரியாகவே பாவித்தார். இதுதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அவரது உதவியாளருக்கு கன்னத்தில் ‘பொளேர்’ விட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைசூர் விமானநிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்துவிட்டு திரும்பும்போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close