[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

ஆம்புலன்ஸ் வசதி இல்லை.. மகளின் சடலத்தை கையில் சுமந்து சென்ற தந்தை..!

no-ambulance-facility-father-took-her-daughter-body-in-his-shoulder

தெலங்கானாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 7 வயது மகளை கண்ணீருடன் கையில் தந்தை சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய 7 வயது மகள் கோமலாவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சம்பத் கொண்டுவந்து சேர்த்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கோமலா உயிரிழந்தார். கையில் பணமில்லாத நிலையில் மருத்துவமனையின் சார்பில் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித்தர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் கேட்டுக்கொண்டார்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் தங்களிடம் இல்லை என தெரிவித்துவிட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சுமார் 2 மணிநேரம் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் காத்திருந்தார் சம்பத். யாரும் எந்த உதவியும் செய்யாத நிலையில் தனது மகளின் சடலத்தை கண்ணீருடன் கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்கு வெளியே வந்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என கேட்டார்.

பலர் நிராகரித்த நிலையில் ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. தெலங்கானா மருத்துவ மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டத்திலேயே ஆம்புலன்ஸ் இல்லாததால், உயிரிழந்த தனது மகளை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக தந்தை கண்ணீர் மல்க அனைவரிடமும் கெஞ்சிய காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close