[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: அமித்ஷா உறுதி 

union-home-minister-shri-amit-shah-meets-groups-of-representatives-from-jammu-and-kashmir

பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.                                  
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3 குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று டெல்லியில் சந்தித்தனர். காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற பஞ்சாயத்து தலைவர்கள் இந்த குழுக்களில் இடம்பெற்றிருந்தனர். இந்த மூன்று குழுவினரும் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் நீக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, கிராமத் தலைவர்களிடம், “அரசியலமைப்பு பிரிவு 73 மற்றும் 74 இனி ஜம்மு-காஷ்மீரில் நடைமுறைக்கு வரும் என்பதால் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் வலிமை பெறும். விரைவில் அங்கு பஞ்சாயத்து தேர்தல் முதல்கட்டமாக நடத்தப்படும். ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து விரைவில் வழங்கப்படும். உங்களுடைய போராட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரானது. அதுதான் எங்களுடையதும்”  என்று அமித்ஷா கூறினார்.

              

தொலைத்தொடர்பு வசதிகள் முழுமையாக விரைவில் சீரமைக்கப்படும் எனவும் அவர்களிடம் அமித்ஷா உறுதி அளித்தார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஜம்மு-காஷ்மீருக்கு கொண்டு செல்வது தங்களது பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close