[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைந்தவர் கைது

a-person-detained-while-enter-the-parliament-allegedly-with-a-knife

நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புது டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட இந்த வளாகத்துக்குள் இன்று காலை கத்தியுடன் ஒருவர், பைக்கில் அலைந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

அதை அந்தப் பகுதியில் பாதுகாப்பில் இருந்த போலீசார் பார்த்தனர். அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக் குப் பின் முரணாக பேசிவருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் அவர், லக்‌ஷ்மி நகரில் வசிக்கும் சாகர் இன்சா என்பதும், பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப் பட்டுள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிமின் சீடர் என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close