[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

சீன அதிபரை மாமல்லபுரத்தில் சந்திக்கிறார் பிரதமர் மோடி?

mamallapuram-to-host-narendra-modi-xi-jinping-meeting-in-october

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஸீ ஜிங்பிங் இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜீ ஜிங்பிங் இடையேயான முதலாவது  சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுகான் நகரில் நடைபெற்றது. அப்போது சர்வதேச நிலைமைக்கு ஏற்ப, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது என இரு தலைவர்களும் முடிவு செய்தனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று சீன அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபர் ஸீ ஜிங்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அக்போடபர் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இந்த சந்திப்பு நடைபெறும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை சீன அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் தலைவர்களின் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தின் சிற்பங்களையும், வரலாற்று சின்னங்களையும் பார்வையிடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close