[X] Close
JUST IN

போலீஸ் பைக்கை திருடி, 40 நிமிடம் ஜாலி ரைட்: வாலிபர் கைது!

man-steals-police-patrol-bike-at-chaderghat-nabbed-using-gps

போலீஸ் ரோந்து பைக்கை திருடி, 40 நிமிடம் ஜாலி ரைட் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். 

ஐதராபாத் அருகிலுள்ள மோதிமண்டல் பகுதியை சேர்ந்தவர் கே.மது (20). இவர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஐதராபாத் சண்டகாட் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். ஸ்டேஷனின் வெளியே ரோந்துக்குச் செல்லக் கூடிய, சைரன் பொருத்தப்பட்ட மோட்டார் பைக் ஒன்று நின்றிருந்தது. அருகில் யாருமில்லை. சாவியும் வண்டியிலேயே இருக்க, இதைத்தான்  எதிர்பார்த் தேன் என்று பைக்கில் ஏறிய மது, வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்தார்.

இதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக செயல்பட்டு விரட்டத் தொடங்கினர். அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் வண்டியை ஒருவர் திருடிக்கொண்டு செல்வதாக வாக்கி டாக்கியில் தெரிவித்தனர்.

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுமார் 40 நிமிடம் ஜாலி ரைடில் பறந்தார் மது. பிறகு ஒரு கட்டத்தில் ரஞ்ச கோண்டா போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரை கைது செய்த போலீசார் அவர் மனநிலை சரியில்லாதவர் போல இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close