[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

நீதிபதி ராகேஷ் குமாரிடமிருந்து அனைத்து பணிகளும் பறிப்பு 

patna-hc-withdraws-judicial-work-from-justice-rakesh-kumar-after-his-order-on-corruption-in-the-judicial-system

பாட்னா உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ராகேஷ் குமாரிடமிருந்து அனைத்து பணிகளையும் அந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரும்ப பெற்றுள்ளார். 

பாட்னா உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ராகேஷ் குமார். இவர் நேற்று ஐஏஎஸ் அதிகாரி கே.பி.ராமய்யாவின் முன்ஜாமீன் மனு மீதான ஆணையை பிறப்பித்தார். இந்த ஆணையில் பாட்னா நீதிமன்றத்தில் ஊழல் நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்தக் கருத்து பாட்னா உயர்நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நீதிபதி ராகேஷ் குமாரிடமிருந்து அனைத்து நீதிபதி பணிகளும் திரும்ப பெறப் பட்டுள்ளதாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரீஸ்வர் பிரதாப் சாஹி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள ஆணையில், “நீதிபதி ராகேஷ் குமார் முன்னிலையில் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close