[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

“மோடி நன்றாகவே ஆங்கிலம் பேசுவார்” - ட்ரம்ப் பேச்சால் எழுந்த சிரிப்பலை

watch-when-trump-said-pm-modi-speaks-excellent-english-but-does-not-want-to

பிரதமர் நரேந்திர மோடி நன்றாகவே ஆங்கிலம் பேசுவார் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாட்டின் நடுவே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இருநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பில் இருவரும் காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசினர். மேலும் பல்வேறு நிகழ்வுகளை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

           

பின்னர், ஊடகங்களில் இருவரும் பேசினர். இருவரும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அப்போது, ட்ரம்ப் வழக்கம் போல் ஆங்கிலத்தில் பேச, மோடி இந்தியில் பேசினார். அவரது பேச்சு மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. 

                      

அப்போது, பிரதமர் மோடி நன்றாகதான் ஆங்கிலம் பேசுவார்; ஆனால் தற்போது அவர் ஆங்கிலத்தில் பேச விரும்பவில்லை என ட்ரம்ப் கூறினார். ட்ரம்பின் இந்த பேச்சை அடுத்து அங்கு இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close