[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

எந்த மாநிலத்தில் அதிகப்படியான சாலை விபத்துகள் ? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

road-accident-reports-in-2017

கடந்த 2017-ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற சாலை விபத்துகளில் அதிகமானோர் உத்தரபிரதேசத்தில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

சாலையில் விபத்துகளை தடுக்க அரசும், போக்குவரத்து காவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பல்வேறு சமயங்களில் நடைபெறும் சாலை விபத்துகளால் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நேரிடுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 405 பேர் சாலை விபத்து சம்பவங்களால் உயிரிழக்கின்றனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 64 ஆயிரம் சாலை விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 1 லட்சத்து 48,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சாலை விபத்துகளில் மொத்தமாக 4 லட்சத்து 70,000 பேர் காயம் அடைந்துள்ளனர். மற்ற சாலைகளை விட தேசிய நெடுஞ்சாலைகளில் தான் அதிக விபத்து சம்பவங்கள் நடைபெறுகின்றன.

2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட 86 சதவீதத்தினர் ஆண்கள். இவர்கள் 18 வயது முதல் 45 வயதுடைய ஆண்கள் ஆவார்கள். கடந்த 2017-ஆம் ஆண்டு நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக சாலை விபத்துகள் நடந்துள்ளன. ஆனால் உயிரிழப்பை பொறுத்தவரை உத்தரப்பிரதேசத்தில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது 2017-ஆம் ஆண்டு உத்தரப்பிரேதச சாலை விபத்துகளில் 20,124 பேர் உயிரிழந்துள்னர். அதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் 16,157 பேரும், அடுத்ததாக மகாராஷ்டிராவில் 12,264 பேரும், கர்நாடகாவில் 10,609 பேரும், ராஜஸ்தானில் 10,444 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், தவறான பாதையில் வாகனங்களை செலுத்துதல் போன்றவை சாலை விபத்திற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close