[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

ஜூன் மாதத்தில் மழைப்பொழிவு குறைவு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

less-rainfall-in-june

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் பதினொரு சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெய்யத் தொடங்கவில்லை என்றும், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் மழைக்கான அறிகுறியே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடந்த மாதம் மழைப்பொழிவு 28 சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மத்தியப் பகுதிகளில் 17 சதவிகிதமும், வடமேற்கில் 7 சதவிகிதமும் மழை குறைவாக பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்‌, நாட்டின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் வரும் 2 வாரங்களில் சராசரியை விட சற்று அதிகமாக மழைப் பொழிய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close