[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இன்றைய முக்கியச் செய்திகள்!  

headlines-of-the-day

இந்தியாவில் ஊழல்வாதிகள் ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேச்சு. புதிய பாரதத்தை உருவாக்கியதில் பெருமிதம் கொள்வதாகவும் பிரான்சில் உரை

பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட மினி பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். வளர்ந்த நாடுகளைவிட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகம் என்று திட்டவட்டம்

வாகன விற்பனையை அதிகரிக்க, பழைய வாகன ஒழிப்பு கொள்கை விரைவில் வரும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. வீடு, வாகனம், தொழில் கடன் வட்டியைக் குறைக்க வங்கிகள் ஒப்புதல் எனவும் பேட்டி

காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்

கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை. மாநகர் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்

சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆதாரங்களை திரட்டுவதில் சிபிஐ தீவிரம். கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய நிறுவனங்களின் விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு கடிதம்

சீனாவை விட்டு அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு. அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதித்ததால் இருநாடுகள் இடையே வர்த்தக பதற்றம்

இந்தியா, மேற்கிந்திய தீவு முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்னுக்கு ஆல்-அவுட். இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்தது மேற்கிந்திய தீவு அணி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close