[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

“வீடு, வாகனக் கடன் வட்டியை குறைக்க நடவடிக்கை” - நிர்மலா சீதாராமன்

nirmala-sitharaman-about-indian-economy

ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு பலன்கள் அப்படியே மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் பேசிய அவர், “ சமூக பொறுப்புணர்வு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத பெரு நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது.

நீண்டகால, குறுகிய கால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிப்பு இனி கிடையாது. வெளிநாட்டு முதலீடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பு திரும்பப் பெறப்படும். பங்குச் சந்தைகளில் முதலீடுகள் செய்வதற்கு ஊக்கம் தரப்படும். தொழிற் துறைக்கான மூலதன நிதி திரட்டும் நடைமுறைகள் எளிதாக்கப்படும். வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு பலன்கள் அப்படியே மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைய நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close