[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

“இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை”- நிர்மலா சீதாராமன்

nirmala-sitharaman-press-meet

அமெரிக்கா, சீனாவைவிட இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் சிறப்பாகவே உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “  உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவில் குறைந்து மந்தமாகவே உள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூட பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. அமெரிக்கா, சீனாவைவிட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது. பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறானது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். பொருளாதார சிக்கல்களை களையவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி நடைமுறையில் உள்ள குறைபாடுகள் களையப்படும். ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close