[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

‘சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பொறுப்புகளும் கலைப்பு’ - அகிலேஷ் அதிரடி

samajwadi-party-president-akhilesh-yadav-dissolves-all-party-postings

சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பதவிகளையும் கலைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த அக்கட்சி, 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறிப்பதாக மாயாவதி அறிவித்தார். மறுபுறம் சமாஜ்வாதி கட்சிக்குள் உட்கட்சி பூசலும் சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதன்படி, அனைத்து இளைஞரணி குழுக்கள், மாணவர் அணி, மகளிர் அணி குழுக்கள், தேசிய மற்றும் மாநில தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளையும் கலைத்து அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். மேலும், உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்ட பொறுப்புகளும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநில தலைவர் நரேஷ் உத்தம் படேல் பதவி மட்டும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகள் சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close