[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

மிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்

not-faced-in-70-years-niti-aayog-vice-chief-on-stress-in-financial-sector

இந்தியாவில் 70 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு நிதித்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் தனியார் முதலீடுகள் குறைந்து காணப்படுகிறது. மேலும் தொழில்துறையின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி குறைந்து உள்ளது. இதனையடுத்து பல்வேறு ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர். 

இந்நிலையில் இந்தியாவில் நிலவும் பொருளாதார சூழல் குறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்துடன் தனியார் நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை நிறுத்தியுள்ளது. மேலும் அந்நிறுவனங்கள் தங்களுக்குள் கடன் பெற தயாராக இல்லை. இந்த நிதி நெருக்கடி மற்றும் முதலீட்டு குறைபாடு இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய பட்ஜெட்டில் ஒரு சில முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் வங்கிகளில் வராகடன்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் அவர்களால் புதிதாக கடன்கள் கொடுக்க முடியவில்லை. அத்துடன் 35 சதவிகிதமாக இருந்த பண புழக்கம் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு பிறகு குறைந்துள்ளது. எனவே இந்தியாவில் நிதித் துறையில் நெருக்கடி மிகவும் அதிகமாகி விட்டது. இந்த நிதித் துறை நெருக்கடியை போக்க கூடுதலான  நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close