[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

எந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்

p-chidambaram-not-answer-for-any-questions-by-cbi

ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு அளித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, காலை 10 மணியளவில் சிபிஐ துணை ஆய்வாளர் ஆர்.பார்த்தசாரதி தலைமையிலான அதிகாரிகள், ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 305 கோடி ரூபாய் முதலீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணையை தொடங்கினர். 

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ புகார் தெரிவித்தது. மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் சிபிஐ தரப்பு வாதாடி வருகின்றன. அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என சிபிஐ கோரியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close