[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ப.சிதம்பரத்திடம் அதிகாலையிலே சிபிஐ விசாரணை - மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்

p-chidambaram-arrested-by-cbi-in-inx-media-case-to-be-introduced-by-cbi-court-today

ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் அதிகாலையிலேயே விசாரணையைத் தொடங்கிவிட்டனர்.

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். சிபிஐ அலுவலகத்திற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. வயது மூப்பு, மருத்துவ தேவை காரணமாக ப.சிதம்பரத்திற்கு இரவு ஓய்வு அளிக்கப்பட்டது.  

ரோஸ் அவென்யூ‌ பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மதியம் 2 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் 10 முதல் 14 நாட்கள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை முறையாக ஆஜராகி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் கேட்கப்பட வாய்ப்புள்ளது. ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ‌தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனு தற்போது தேவையற்றதாகிவிட்டது. 

      

இதனிடையே, ப.சிதம்பரத்தை அதிகாலையில் எழுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ‌காலையில் அவரிடம் இருந்து அடிப்படை தகவல்களை பெற சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close